Sunday, April 12, 2020

சுரதா கவிதைகளின் தொகுப்பு

சுரதா கவிதைத் தொகுப்புகளின் வரிகளில் சில
தேன் :
பொங்கி வழிந்திடும்தேன் - அது
பூக்களின் வியர்வையடி
பகை:
நெருப்பின் அழுக்கே புகையாகும்
நினைவின் அழுக்கே பகையாகும்


      செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த சுரதா, உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இக்கவிதை தொகுப்புகள் ஒவ்வொன்றும், சுரதாவின் உவமையை உலகிர்க்கு உரைக்கும். 

இந்த புத்தக தொகுப்பில் உள்ள ஓவ்வொரு வரிகளும், இயற்கை, வாழ்க்கை, விளையாட்டு, கல்வி, வீரம், குடும்பம் என தனித்தனியாக சுரதாவின் உவமை கவிதை நடையை மேற்கோளிட்டு காட்டுகிறது. 



இதுபோன்ற உவமைகளின் தொகுப்பு புத்தகம்.





 சுரதா

 Madras : Sri Yeses Print House

Thursday, April 2, 2020

போர் - மனிதநேயம் எங்கே?

அக்கால போர்
இரு நாட்டு போர் வீரர்கள் 
மட்டும் மோதிக்கொண்டு
வீரத்தை மட்டுமே நிலைநாட்டினர்!!

இன்று ஒரு அணுஆயுதம் போதும்,
ஒரு நாட்டையே நாசமாக்கிட!!




Wednesday, April 1, 2020

நடுத்தர இளைஞன்

நிலையில்லாத வாழ்க்கையில் 
நிலையென்று நினைத்த 
எதுவும் நிலைத்ததில்லை,

இதை உணர்ந்தும் 

தனக்காகவோ, 
பிறருக்காகவோ,

ஓடுவதை மட்டும் 
விட்டுவிடாமல்,

"எதற்கு ஒடுகிறோம்?" என்று 
நினைத்துப் பார்க்கவே
நேரமில்லாமல்,

ஓடுகிறான்
நடுத்தர இளைஞன்!!!!!

எதற்கென்று

நினைக்க மட்டும்
நேரம் கிடைத்திட,

இலட்சியமும், கனவும்
ஒன்றாய் உதித்திட,

வாய்ப்புகள் தேடியே 
வாழ்க்கையும் நகர்ந்திட,

நடுத்தர இளைஞனின் 
சூழ்நிலைகள் சூழ்ந்திட,

மீண்டும்
தனக்காகவோ,
பிறருக்காகவோ, 

ஓட்டத்தை 
தொடர்கிறான்,
நடுத்தர இளைஞன்!!!!!

தனக்கென்ற இலட்சியம்
கண்முன் கண்டாலும்,

தொட்டுவிட ஓடியும்
கானல் நீராய் போனாலும்,

ஓடிய ஓட்டமெல்லாம்,
வயதையே ஓட்டினாலும்,

தான் வாழ்கின்ற
வாழ்க்கை
சலிப்புடன் இருந்தாலும்,

வாழ நினைத்த 
வாழ்க்கை 
விலகியே சென்றாலும்,

ஓடுவது என்னவோ
அனுபவ ஆசனோடு!!!!

ஒரு நாள் 
அவன் இலட்சியத்தை 
அடைவான்,

தோற்றால்கூட

ஆசனாய் இருந்திருப்பான்,

வரும் தலைமுறை
நடுத்தர இளைஞர்களின்
இலட்சியம் வென்றிட!!!!!

-KRV