Just Listen To Me
Sunday, August 30, 2020
Sunday, August 16, 2020
புதிய ஸ்டைலில் டிராபிக் சிக்னல்... எல்இடி விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை காமராஜர் சாலை டிராபிக் சிக்னல்.......!
ஜப்பான் நாட்டில் உள்ளது போன்று சென்னையில் புதிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்னல் தெரியும் வகையில் கம்பம் முழுவதும் எல்.இ.டி.விளக்குகள் ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
பச்சை நிற சிக்னல் விழுந்தால் GO என்றும்,
ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் LISTEN என்றும்,
சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் STOP என்றும்
மின்னணு அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு, அவையும் சிக்னலுக்கேற்றவாறு ஒளிரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னல் கம்பம் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களிடையே வரவேற்பை பொருத்து விரிவுபடுத்தப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வித தொழில்நுட்ப்பமாகினும், நம்ம அரசாங்கம் பராமரிப்பை சரிவர செய்தால் மட்டுமே, தொழில்நுட்பம் நம்மோடு பயணிக்கும், இல்லையேல் சூரியஒளி சிக்னல் கம்பம்போல் பயனற்றுப் போய்விடும்.
